முப்பரிமாணம்

காதல்-திகில் கலந்த “முப்பரிமாணம்” ‘முப்பரிமாணம்’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகி உள்ளது. இதில், சாந்தனு கதாநாயகனாகவும் சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
தம்பி ராமையா, அப்புக்குட்டி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். டைரக்டர்கள் பாலா, கதிர் ஆகியோரிடம் உதவி டைரக்டராக இருந்த அதிரூபன் டைரக்டு செய்துள்ளார். படத்தை பற்றி அவர் சொல்கிறார்:-
“காதல், திகில் கதையம்சம் உள்ள படமாக, ‘முப்பரிமாணம்’ தயாராகி உள்ளது. பள்ளிப்பருவம் முதல் கல்லூரி வரையிலான நாயகன்-நாயகியின் வாழ்க்கையே கதை. நாம் சரியென்று எடுக்கும் முடிவுகள் சில நேரம் தவறாகிப் போகலாம். தவறு என்று எடுக்கும் முடிவுகள் சரியாகி விடலாம். இப்படி எடுக்கும் முடிவுகள் என்ன பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன? என்பதை யதார்த்தமாக படமாக்கி இருக்கிறோம்.
படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்ற உணர்வை ஏற்படுத்தும். சாந்தனு கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக வெவ்வேறு தோற்றங்களில் வருகிறார். படத்தில் 27 நடிகர்-நடிகைகள் பங்கேற்ற ‘உல்லாசமாய் உற்சாகமாய்’ என்ற பாடல் காட்சி இடம்பெற்று உள்ளது. இசை: ஜி.வி.பிரகாஷ். சமை யாலயா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித் துள்ளது.”

Next Story