எங்கேயும் நான் இருப்பேன்


எங்கேயும் நான் இருப்பேன்
x
தினத்தந்தி 28 Feb 2017 12:32 PM IST (Updated: 28 Feb 2017 12:32 PM IST)
t-max-icont-min-icon

காதலுக்காக படுகொலை செய்யப்படும் ஒருவனின் ஆவி தனது நண்பனின் உதவியுடன் அவன் உடலில் புகுந்து கொண்டு கொலைகாரர்களை எப்படி பழிவாங்குகிறது? என்பதை கருவாக வைத்து, ஒரு படம் தயாராகிறது.

ஒரு பேயின் காதல் கதை ‘எங்கேயும் நான் இருப்பேன்’

இந்த படத்துக்கு, ‘எங்கேயும் நான் இருப்பேன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

பிரஜின், சுரேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, தாஜ் அமீர் வில்லனாக நடிக்கிறார். பிரிமுவர்கிஸ் சாமியார் வேடத்தில் நடிக்கிறார். கலா கல்யாணி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர், ‘கதிர்வேலனின் காதல்’ படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தவர். அஷ்ரப் பெருங்காடி தயாரிக்க, கதை-திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார், பென்னிதாமஸ்.

ஒரு பேயின் காதல் கதையாக சென்னை, கோவை, பொள்ளாச்சி, ஏர்வாடி ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.
1 More update

Next Story