ஐங்கரன்


ஐங்கரன்
x
தினத்தந்தி 28 Feb 2017 12:38 PM IST (Updated: 28 Feb 2017 12:37 PM IST)
t-max-icont-min-icon

‘புரூஸ்லீ’ படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ்குமார், ‘ஐங்கரன்’ என்ற படத்தில் நடிக்கிறார். இது, காதல், அதிரடி சண்டை காட்சிகள், திகில் ஆகிய மூன்றும் கலந்த கதை.

‘ஐங்கரன்’ படத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயராக ஜி.வி.பிரகாஷ்குமார்

இதில், ஜி.விபிரகாஷ் மெக்கானிகல் என்ஜினீயராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். இவர், நர்ஸ் வேடம் ஏற்றுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார்-மகிமா நம்பியார் ஜோடியுடன் ‘ஆடுகளம்’ நரேன், காளி வெங்கட், அருள்தாஸ், சுவாமிநாதன் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ரவி அரசு. காமன் மேன் ப்ரசன்ஸ் நிறுவனம் சார்பில் பி.கணேஷ் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு: சுபா கணேஷ்.

படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
1 More update

Next Story