மாநகரம்


மாநகரம்
x
தினத்தந்தி 1 March 2017 3:49 PM IST (Updated: 1 March 2017 3:48 PM IST)
t-max-icont-min-icon

சென்னை போன்ற மெட்ரோ மாநகரத்தில் நடக்கும் ஒரு திரில்லர் கதையமைப்பை கொண்டது.

ஸ்ரீசந்திப் கி‌ஷன், ஸ்ரீ, சார்மி, முனிஸ்கான் நடிக்கும் படம் ‘மாநகரம்’. படத்தை பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில் ''மாநகரம் திரைப்படம்

வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் நான்கு பேர் சென்னையை போன்ற பெரும் நகரத்தை எவ்வாறு பார்க்கிறார்கள், அந்நகரம் அவர்களை எவ்வாறு நடத்துகிறது என்ற கோணத்தில் திரைக்கதை நகரும்.

படத்தில் ஹைபர் லிங்க் என்ற புதுமையான திரைக்கதை யுக்தியை கையாண்டுள்ளோம். நான்கு பேரில் ஒருவர் கதை முடியும் இடத்தில் இருந்து அடுத்தவரின் கதை தொடங்குவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பேரின் கதையிலும் ஒரு உள் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். இது தான் ஹைபர் லிங்க். இந்த படம் தொழில்நுட்ப ரீதியாக மிகச்சிறந்த படமாக இருக்கும்.


இசை ஜாவீது ரியாஸ், ஒளிப்பதிவு செல்வகுமார். படத்தில் நாயகியாக ரெஜினா கசான்ட்ரா நடித்துள்ளார். அவருக்கு கதையோடு ஒன்றி பயணிக்கும் கதாபாத்திரம். 70 சதவித படபிடிப்பை நாங்கள் பரபரப்பான தெருக்களில் வைத்து தான் படம்பிடித்தோம். இது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

1 More update

Next Story