அனிமேஷன் கலைஞராக சிபிராஜ்


அனிமேஷன் கலைஞராக சிபிராஜ்
x
தினத்தந்தி 3 March 2017 12:28 PM IST (Updated: 6 July 2017 3:30 PM IST)
t-max-icont-min-icon

நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை என மாறுபட்ட கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வரும் சிபிராஜ் தற்போது, ‘கட்டப்பாவ காணோம்’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதையடுத்து சிபிராஜ், அறிமுக டைரக்டர் வினோத் இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

வினோத், பிரபல டைரக்டர் வி.இசட். துரையிடம் இணை இயக்குனராக பணி புரிந்தவர். பல விளம்பர படங்களையும் இயக்கியிருக்கிறார். இவர் சொல்கிறார்:-

“இது, அதிரடியான திகில் படம். சமுதாய பிரச்சினையை மையமாக கொண்ட கதை. இந்த படத்தை சென்னை, பொள்ளாச்சி, காஷ்மீர் என மூன்று வெவ்வேறு இடங்களில் படமாக்க இருக்கிறோம். படத்தின் கதைக்களம் மூன்று இடங்களில் பயணித்தாலும், அதை ஒரே மையப்புள்ளியில் கொண்டு வந்து இணைத்திருப்பதுதான் கதையின் சிறப்பு அம்சம்.

இதுவரை பார்த்திராத சிபிராஜை அவருடைய கதாபாத்திரம் பிரதிபலிக்கும். படத்தில் அவர், அனிமேஷன் கலைஞராக நடிக்கிறார். இது, எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய கதாபாத்திரமாக இருக்கும். பெயர் சூட்டப்படாத இந்த படத்துக்கு ராம் ஜீவன் இசையமைக்கிறார். அரவிந்த் ஒளிப்பதிவு செய் கிறார். விஜய் கே.செல்லையா தயாரிக்கிறார்.”
1 More update

Next Story