தமிழனானேன்


தமிழனானேன்
x
தினத்தந்தி 3 March 2017 12:34 PM IST (Updated: 3 March 2017 12:33 PM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கருவாக வைத்து, ‘தமிழனானேன்’ என்ற படம் தயாராகிறது.

பாலியல் கொடுமைகளுக்கு எதிரான ‘தமிழனானேன்’

படத்தின் கதை-திரைக்கதை-வசனம்-பாடல்கள் எழுதி டைரக்டு செய்வதுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறார், சதீஷ் ராமகிருஷ்ணன். ‘தமிழனானேன்’ படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

“ஆண்களின் தவறான மனப்போக்கால்தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. இப்போது நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஆதி தமிழன் எதிர்கொண்டால், எப்படி கையாள்வான், தீர்வு காண எப்படி நடந்து கொள்வான்? என்பதே இந்த படத்தின் கதை.

ஆதி தமிழர்களின் தற்காப்பு கலைகளான சிலம்பம், குத்து வரிசை, வர்மம், பிடி வரிசை மற்றும் குங்பூ, கராத்தே ஆகிய தற்காப்பு கலைகளும் படத்தில் இடம் பெறுகின்றன. ஹாலிவுட் அனிமேட்டர் சாமி மாண்ட்ரேக் பெசி, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வினோத் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். விக்னேஷ் அருண், ரகு ராமையா ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய் கிறார்கள். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன.”
1 More update

Next Story