விழித்திரு

‘அவள் பெயர் தமிழரசி’ படத்தை டைரக்டு செய்த மீரா கதிரவன் தயாரித்து டைரக்டு செய்துள்ள புதிய படம், ‘விழித்திரு.’
இந்த படத்தில் விதார்த், கிருஷ்ணா, வெங்கட் பிரபு, எஸ்.பி.பி.சரண், தம்பி ராமய்யா, தன்சிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பாடல் காட்சியில், டி.ராஜேந்தர் நடித்து இருக்கிறார்.
“இது, ஒரு இரவில் நடக்கிற கதை. படத்தில் 4 கதைகள் உள்ளன. அந்த 4 கதைகளும் ஒரு புள்ளியில் சந்திப்பதுதான் படத்தின் உச்சக்கட்ட காட்சி. இதில் காதல், மோதல், நகைச்சுவை, திகில் ஆகிய அனைத்து அம்சங்களும் உள்ளன. சென்னை குடிசைவாசி பெண்ணாக நான் நடித்து இருக்கிறேன். என் கதாபாத்திரத்தின் பெயர், சரோஜாதேவி.
படத்தில், எனக்கு ஒரு சண்டை காட்சி இருக்கிறது. அதில், துணிச்சலாக நடித்தேன். நான் ஏற்கனவே சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை கற்று இருப்பதால், சண்டை காட்சியில் நடிப்பது சுலபமாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில், பெண்கள் அனைவரும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வது, அவசியம். பாலியல் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க, தற்காப்பு கலை உதவும்.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பெண்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டால், முரட்டு சுபாவம் வந்து விடுமோ என்று பயப்பட வேண்டாம். மனம், ஒரு நிலைப்படும். கோபம் குறையும். பதற்றம் ஏற்படாது.
இவ்வாறு நடிகை தன்சிகா கூறினார்.
பேட்டியின்போது நடிகர் கிருஷ்ணா, டைரக்டர் மீரா கதிரவன், ஒளிப்பதிவாளர்கள் விஜய் மில்டன், ஆர்.வி.சரண், இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் மற்றும் படக்குழுவினர் அருகில் இருந்தார்கள்.

Next Story