டிக் டிக் டிக்


டிக் டிக் டிக்
x
தினத்தந்தி 17 March 2017 2:49 PM IST (Updated: 16 Aug 2017 3:21 PM IST)
t-max-icont-min-icon

‘மிருதன்’ படத்தில் இணைந்த ஜெயம் ரவியும், டைரக்டர் சக்தி சவுந்தர்ராஜனும், ‘டிக் டிக் டிக்’ என்ற புதிய படத்தில் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள்.

ஜெயம்ரவி படத்தில் சிங்கப்பூர் நடிகர் வில்லன் ஆனார் ஆரோன் அஜீஸ்

இந்த படத்தை வி.ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு, சென்னையில் அமைக் கப்பட்டுள்ள பிரமாண்டமான அரங்கில் நடைபெறுகிறது.

விண்வெளியை மையப்படுத்திய கதை இது. இதில், சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அஜீஸ் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர், ‘கே.எல். கேங்ஸ்டர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். பல இந்திய படங்களுக்காக அணுகியும் நடிக்க ஒப்புக் கொள்ளாத இவர், ‘டிக் டிக் டிக்’ படத்தின் திரைக்கதையை படித்ததும் பிடித்துப் போய் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தில், நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். வின்சென்ட் அசோகன், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
1 More update

Next Story