நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல


நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல
x
தினத்தந்தி 27 March 2017 4:06 PM IST (Updated: 27 March 2017 4:06 PM IST)
t-max-icont-min-icon

தினேஷ் செல்வராஜ் இயக்குனராக அறிமுகமாகும் "நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல"

மணிரத்னத்தின் உதவியாளர்

இயக்குனர் மணிரத்னத்துடன் "அலைபாயுதே" "டும் டும் டும்" "கன்னத்தில் முத்தமிட்டால்" "கடல் ஆகிய படங்களில் இணை இயக்குனராய்  பணியாற்றியாவரும், பிரபல கதாசிரியர் ஆர்.செல்வராஜின் மகனுமான தினேஷ் செல்வராஜ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

அன்னக்கிளி, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், உதய கீதம், சின்னக் கவுண்டர் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதியவரும், பிரபல இயக்குனர்கள் பாரதிராஜா, மணிரத்னம், எஸ்.பி. முத்துராமன், ஆர்.வி.உதயகுமார் ஆகியவர்களுடன் இணைந்து பணியாற்றியவருமான ஆர்.செல்வராஜ் இப்படத்திற்கு தினோஷுடன் இணைந்து கதை அமைத்துள்ளார்.

        தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரில் கதாநாயகனாக நடித்த கார்த்திக்கேயன் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஷரியா, இவன்ஸ்ரீ, ஜெகதீஸ், ஜார்ஜ் விஜய், அரவிந்த், அருள் ஜோதி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆல்ஃபா ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கின்றது.

1 More update

Next Story