ஒரு கிடாயின் கருணை மனு’வும்


ஒரு கிடாயின் கருணை மனு’வும்
x
தினத்தந்தி 28 March 2017 1:13 PM IST (Updated: 28 March 2017 1:13 PM IST)
t-max-icont-min-icon

ஒரு ஆட்டை முக்கிய கதாபாத்திரமாக வைத்து உருவாகியிருக்கும் படம், ‘ஒரு கிடாயின் கருணை மனு.

ஆட்டுக்கார அலமேலுவும், ‘ஒரு கிடாயின் கருணை மனு’வும்...

’ இதில், விதார்த்-ரவீனா கதாநாயகன்-கதாநாயகியாக நடித்துள்ளனர். ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்ய, ரகுராம் இசையமைத்து இருக்கிறார். சுரேஷ் சங்கையா டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

“முழுமையான அர்ப்பணிப்போடு பணிபுரியும் நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கொண்ட படம், நிச்சயமாக ரசிகர்களை சென்றடைந்து விடும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘ஒரு கிடாயின் கருணை மனு.’ ஒரு தரமான-தனித்துவமான கதையை தேர்வு செய்த ஈரோஸ் நிறுவனத்துக்கு என் பாராட்டுகள்.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஆட்டை வைத்து எடுக்கப்பட்ட ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் எப்படி அமோக வரவேற்பை பெற்றதோ, அதே போன்ற வரவேற்பையும், வெற்றியையும் இந்த படமும் பெறும்.”
1 More update

Next Story