செவிலி


செவிலி
x
தினத்தந்தி 28 March 2017 2:11 PM IST (Updated: 28 March 2017 2:11 PM IST)
t-max-icont-min-icon

இது தாயின் பாசத்திற்காக ஏங்கும் மகனுக்கும்-மகனின் பாசத்தை புரிந்து கொள்ளாத தாய்க்கும் நடக்கும் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கிறது.

எம்.கே.எம்.பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘செவிலி’.

இந்த படத்தில் அரவிந்த் ரோ‌ஷன், கீர்த்தி ரெட்டி, நாயகன் நாயகியாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘மைனா’ பூவிதா, நெல்லை  சிவா, ‌ஷகிலா, சிட்டிசன் மணி உள்பட பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....

“தாய் பூவிதாவின் அரவணைப்பும் பாசமும் கிடைக்காமல் ஏங்கி தவிக்கும் மகனாக அர்விந்த் ரோ‌ஷன் நடிப்பில் தனி முத்திரை  பதித்துள்ளார். மகனின் பாசத்தை உணராத தாய் நிலையை அறிந்து காதலிக்க தொடங்கும் கீர்த்தி ரெட்டி- தனது காதலுக்கு தடையாக  காதலனே மாறியதை எண்ணி வேதனைப்படும் காட்சிகளில் அனைவரையும் உருக வைத்து இருக்கிறார்.

இசை- வி.எம்.ஜீவன், பின்னணி இசை-சங்கர் ரங்கராஜன், பாடல்கள்- ப்ரியா, பிரபாகர், சண்டை- திரில்லர் எஸ்.ஆர்.முருகன்,  நடனம்-எஸ்ரா எடிசன், எடிட்டிங்- சுப்பிரமணி, தயாரிப்பு- கே.பீர்முகமது, எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம்- ஆர்.ஏ. ஆனந்த்.
1 More update

Next Story