தனயன்


தனயன்
x
தினத்தந்தி 1 April 2017 1:37 PM IST (Updated: 1 April 2017 1:37 PM IST)
t-max-icont-min-icon

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில், ‘தனயன்’ என்ற படம் தயாராகிறது.

2 மாறுபட்ட வேடங்களில் ஜெய் ஆகாஷ் ‘தனயன்’ படத்தில்

 ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ், ஜெயா பிலிம்ஸ், மேஸ்னர் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இதில், ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக் கிறார். ‘தனயன்’ என்றால் மகன் என்று பொருள். ஒரு மகன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், ஒரு மகன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாகவும் 2 மாறுபட்ட வேடங்களில், ஜெய் ஆகாஷ் வருகிறார். புதுமுகங்கள் ஆர்த்தி சுரேஷ், கவிதா சேட்டர்ஜி, குஷி முகர்ஜி ஆகிய மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக் கிறார்கள். முக்கிய வேடத்தில், சாம்ஸ் நடிக்கிறார். தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, யு.கே.முரளி இசையமைக்கிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத்தில் நடைபெற்றது. படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. அங்கு 3 சண்டை காட்சிகளும், 4 பாடல் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன.

1 More update

Next Story