ராஜாவும் 5 கூஜாவும்


ராஜாவும் 5 கூஜாவும்
x
தினத்தந்தி 1 April 2017 1:45 PM IST (Updated: 1 April 2017 1:45 PM IST)
t-max-icont-min-icon

‘ராஜாவும் 5 கூஜாவும்’ என்ற பெயரில், ஒரு நகைச்சுவை படம் தயாராகிறது.

ஜெய்ப்பூர் அரண்மனையில் ‘ராஜாவும் 5 கூஜாவும்’

இந்த படத்துக்காக, “உன் அழகை கன்னியர்கள் கண்டதினாலே” என்ற பழைய பாடல், ‘ரீமிக்ஸ்’ செய்யப்பட்டு ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்டது. கதாநாயகன் அர்வி மற்றும் இமான் அண்ணாச்சி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பாலாஜி, ரவிமரியா ஆகியோர் ராஜாக்கள் உடையில், 40 பாலே நடன அழகிகளுடன் ஆடிப்பாடுவது போல் அந்த பாடல் காட்சி படமானது.
ரவி விஜய் ஆனந்த் இசையில் உருவான அந்த பாடலை கானா பாலா பாடியிருந்தார். அட்சய் ஆனந்த் நடனம் அமைக்க, ஒளிப்பதிவாளர் கார்த்திக்ராஜா படமாக்கினார்.

அலெக்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அர்வி தயாரிக்கும் இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய் திருக்கிறார், பிரபு ஆதித்யன்.
வேலை தேடி சென்னைக்கு வரும் 5 நண்பர்களை பற்றிய கதை, இது.
1 More update

Next Story