சதுர அடி 3500


சதுர அடி 3500
x
தினத்தந்தி 15 April 2017 12:59 PM IST (Updated: 31 July 2017 3:15 PM IST)
t-max-icont-min-icon

‘சதுர அடி 3500’ என்ற பெயரில் ஒரு திகில் படம் தயாராகி இருக்கிறது. இதில், ரகுமான் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

‘சதுர அடி 3500’ பேய் இருக்கிறதா, இல்லையா? என்பதை ஆராயும் படம்

‘சதுர அடி 3500’ என்ற பெயரில் ஒரு திகில் படம் தயாராகி இருக்கிறது. இதில், ரகுமான் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். அவருடன் புதுமுகங்கள் நிகில், ஆகாஷ், இனியா, கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தலைவாசல் விஜய், பிரதாப் போத்தன், பெசன்ட் நகர் ரவி, டைரக்டர் சரவண சுப்பையா, பரவை முனியம்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் ராகவேந்திரா இசையமைத்து இருக்கிறார். ஜெய்சன் ஜோசப் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன்: ஸ்டீபன். படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

“ரியல் எஸ்டேட் துறையில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை பின்னணியாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். பேய் இருக்கிறதா, இல்லையா? என்பதை பற்றி ஒரு புதிய கோணத்தில் புலனாய்வு செய்யும் கதாபாத்திரம், படத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

அமானுஷ்ய சக்திகளை கண்டு கொள்வது எப்படி? அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? வாழ்ந்து முடித்த ஒருவரின் ஆத்மாவின் பயணம் எங்கு எப்படியிருக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த படத்தின் திரைக்கதை தயாராகி இருக்கிறது. சென்னை, பெங்களூரு, சாலக்குடி ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.”
1 More update

Next Story