கருப்பு ராஜா, வெள்ளை ராஜா


கருப்பு ராஜா, வெள்ளை ராஜா
x
தினத்தந்தி 15 April 2017 1:54 PM IST (Updated: 12 May 2017 1:14 PM IST)
t-max-icont-min-icon

விஷால், கார்த்தி ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

விஷால்-கார்த்தி இணைந்து நடிக்கும் ‘கருப்பு ராஜா, வெள்ளை ராஜா’

இந்த படத்துக்கு, ‘கருப்பு ராஜா வெள்ளைராஜா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் கதாநாயகியாக சாயீஷா நடிக்கிறார். பிரபுதேவா டைரக்டு செய்கிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இதில் நடிப்பது பற்றி விஷால் கூறியதாவது:-

“இந்த படம் 2 கதாநாயகர்களை கொண்டது. மறைந்த டைரக்டர் கே.சுபாஷ் எழுதிய கதை, இது. இதில் கார்த்தியும், நானும் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருவரின் கதாபாத்திரங்களும் வெவ்வேறு குணாதிசயங்களுடன் இருக்கும். ‘கருப்பு ராஜா, வெள்ளை ராஜா’ படத்தை ‘ஷோலே’ மாதிரி எடுப்பேன் என்று சொல்லி ஐசரி கணேஷ் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கிறார். நானும், கார்த்தியும் படங்களில் நடித்து, நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ரூ.10 கோடி கொடுக்க முடிவு செய்துள்ளோம். இந்த படத்தில் இருந்து அந்த பணத்தை கொடுப்போம்.”

கார்த்தி கூறும்போது, “2 கதாநாயகர்கள் சேர்ந்து நடித்தால் குழப்பம் வரும். இருவரும் நண்பர்களாக இருந்தால் மட்டுமே நடிக்க முடியும். நானும், விஷாலும் நண்பர்களாக இருப்பதால், சேர்ந்து நடிக்கிறோம். என் கதாபாத்திரம் நகைச்சுவையாகவும், விஷால் கதாபாத்திரம் அதற்கு நேர்மாறாகவும் இருக்கும்” என்றார்.

டைரக்டர் பிரபுதேவா கூறும்போது, “அகிம்சைக்கும், வன்முறைக்கும் நடக்கும் போராட்டமே படத்தின் கதை” என்றார். இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சமீர் ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் விஷால்-கார்த்தியுடன் ஆர்யாவும் இணைந்து நடிக்கிறார்

போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி ஆகிய படங்களை டைரக்டு செய்த பிரபுதேவா, சில வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு, ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், விஷால், கார்த்தி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். படத்தில் நடித்து கிடைக்கும் பணம் முழுவதையும் நடிகர் சங்க கட்டிட நிதிக்கு வழங்க இருப்பதாக இருவரும் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விஷால்-கார்த்தியுடன் இப்போது ஆர்யாவும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில், 3 கதாநாயகிகள் இருக்கிறார்கள். அதில் ஒருவராக ‘வனமகன்’ பட நாயகி சாயீஷா இடம் பெற்று இருக்கிறார்.

திரைக்கதை-வசனம்-டைரக்‌ஷன் பொறுப்புகளை பிரபுதேவா ஏற்றுள்ளார். இந்த படத்தின் வெளிநாட்டு வினியோக உரிமையை நடிகர் அருண்பாண்டியனின் ஏ.பி. குரூப் நிறுவனம் வாங்கியிருக் கிறது.
1 More update

Next Story