ஸ்கெட்ச்


ஸ்கெட்ச்
x
தினத்தந்தி 27 April 2017 3:17 PM IST (Updated: 27 April 2017 3:16 PM IST)
t-max-icont-min-icon

விக்ரம்-தமன்னா ஆகிய இருவரும் முதன்முதலாக ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.

விஜய்சந்தர் டைரக்‌ஷனில் விக்ரம்-தமன்னாவுடன், ‘ஸ்கெட்ச்’

இந்த படத்துக்கு, ‘ஸ்கெட்ச்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. விஜய்சந்தர் டைரக்டு செய்கிறார். இவர், சிம்பு நடித்த ‘வாலு’ படத்தை டைரக்டு செய்தவர்.

விக்ரம்-தமன்னா ஜோடியுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன் ஆகியோரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில், பிரியங்கா நடிக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் வழங்க, மூவிங் பிரேம் தயாரிக்கிறது.

படத்துக்காக டைரக்டர் விஜய்சந்தர் எழுதிய “கனவே கனவே புது கனவே விழிக்கும் போதும் வரும் கனவே” என்ற பாடலை விக்ரம் பாட, தமன் இசையில் பதிவு செய்யப்பட்டது. படத்தை பற்றி டைரக்டர் விஜய்சந்தர் கூறியதாவது:-

“சென்னையை பின்னணியாக கொண்டு உருவாகும் இந்த படம், புது மாதிரியான உணர்வை ஏற்படுத்தும். வட சென்னையை பற்றி ஏற்கனவே வந்த படங்கள் எல்லாமே அந்த பகுதி மக்கள் படிப்பறிவு இல்லாத பாமரர்கள், ஏழைகள் என்றுதான் சித்தரித்துள்ளன. வட சென்னையிலும் டாக்டர்கள், வழக்கறிஞர்கள் போன்ற உயர்மட்ட மக்கள் இருக்கிறார்கள் என்கிற கருத்தை சொல்லும் படமாக, ‘ஸ்கெட்ச்’ உருவாகி வருகிறது. பரபரப்பான அதிரடி காட்சிகளும் படத்தில் இருக்கிறது.”
1 More update

Next Story