மதிப்பெண்


மதிப்பெண்
x
தினத்தந்தி 27 April 2017 3:30 PM IST (Updated: 27 April 2017 3:29 PM IST)
t-max-icont-min-icon

ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் தன் தாயின் சபதத்தை நிறைவேற்றுவதற்காக, ஐ.ஏ.எஸ். படிக்க சென்னை வருகிறான்.

அவனுக்கு ஒரு இளம்பெண் உதவி செய்கிறாள். இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாகிறது. அந்த இளைஞன் தனது தாயின் சபதத்தை நிறைவேற்றினானா, காதலில் வெற்றி பெற்றானா? என்பதை கருவாக வைத்து, ‘மதிப்பெண்’ என்ற படம் உருவாகி இருக்கிறது.

பாண்டியன் கலைக்கூடம் சார்பில் பேராசிரியர் இரா.சோதிவாணன் கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்துள்ளார். கே.கிருஷ்ணமூர்த்தி திரைக்கதை எழுதி டைரக்டு செய்திருக்கிறார். ‘அம்புலி,’ ‘ஆ’ படங்களில் நடித்த ஸ்ரீஜித் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். நேகா, அமிர்தா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். லிவிங்ஸ்டன், ‘சங்கர் குரு’ ராஜா, டைரக்டர் நாராயணமூர்த்தி, சேரன்ராஜ், ‘கும்கி’ அஸ்வின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
1 More update

Next Story