ஜெட்லி


ஜெட்லி
x
தினத்தந்தி 9 May 2017 1:17 PM IST (Updated: 9 May 2017 1:17 PM IST)
t-max-icont-min-icon

ஆடு, மாடு, யானை, குரங்கு, நாய் போன்ற வாயில்லா ஜீவன்களை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து சில படங்கள் திரைக்கு வந்து வெற்றி பெற்றுள்ளன.

உலக அரசியலை சொல்லும் ‘ஜெட்லி’

அந்த வரிசையில், ஒரு வெள்ளை பன்றியை மையப்படுத்தி, ‘ஜெட்லி’ என்ற படம் தயாராகி இருக்கிறது.

இதில், முக்கிய நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன்சாய் ஆகிய இருவரும் நடிக்க, தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம்குமார், மற்றும் எத்திராஜ் பவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு, சி.சத்யா இசையமைத்து இருக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார், ஜெகன்சாய். ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் தயாரித்துள்ளது.

படத்தை பற்றி டைரக்டர் ஜெகன்சாய் கூறும்போது, “இது, நகைச்சுவை படம் மட்டுமல்ல. உலக அரசியலை சொல்லும் படம். எந்த வெளிநாடும் பக்கத்து நாடு என்ற அக்கறையுடன் உதவிக்கரம் நீட்டுவதில்லை. அவர்களின் வியாபார சந்தையை விஸ்தரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அன்புக்கரம் நீட்டுகின்றன என்ற கருத்தை இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படம் வளர்ந்து இருக்கிறது” என்றார்.
1 More update

Next Story