பிருந்தாவனம்


பிருந்தாவனம்
x
தினத்தந்தி 9 May 2017 1:27 PM IST (Updated: 9 May 2017 1:27 PM IST)
t-max-icont-min-icon

‘மொழி,’ ‘அபியும் நானும்,’ ‘பயணம்’ போன்ற தரமான கதையம்சம் உள்ள படங்களை இயக்கிய ராதாமோகன் அடுத்து இயக்கியிருக்கும் புதிய படம், ‘பிருந்தாவனம்.

அருள்நிதி -தான்யா நடித்த ‘பிருந்தாவனம்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

’ இதில், கதாநாயகன் அருள்நிதி காது கேட்காத-வாய் பேச முடியாத இளைஞராக நடித்து இருக்கிறார். இதுபற்றி டைரக்டர் ராதாமோகன் கூறியதாவது:-

“ஊட்டியை கதைக்களமாக கொண்ட படம், இது. சம்பந்தமே இல்லாத 2 பேருக்கு ஏற்படும் நட்பு பற்றிய கதை. இதில், அருள்நிதி காது கேட்காதவராக-வாய் பேச முடியாதவராக வருகிறார். கதாநாயகி, தான்யா. மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி. படத்தில் இவர், கல்லூரி மாணவியாக நடித்து இருக்கிறார்.

விவேக், நடிகர் விவேக்காகவே வருகிறார். கதையில் வரும் முக்கிய கதாபாத்திரம், இது. விவேக்கின் வழக்கமான நகைச்சுவையுடன், இன்னொரு பரிமாணமாகவும் தெரிவார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில், எம்.எஸ்.பாஸ்கர் நடித்து இருக்கிறார்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். விவேகானந்தன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பார்த்திபன் வசனம் எழுத, கதை, திரைக்கதை, டைரக்‌ஷன் பொறுப்புகளை நான் (ராதாமோகன்) கவனித்து இருக்கிறேன். வான்சன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரித்து இருக்கிறார். ஊட்டியிலும், மைசூர் அருகில் உள்ள தக்லேஸ்பூரிலும் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.
இந்த படத்துக்கு தணிக்கை குழு, ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இம்மாத வெளியீடாக படம் திரைக்கு வரும்.”
1 More update

Next Story