கொடிவீரன்

சசிகுமார்-முத்தையா கூட்டணியில் ‘கொடிவீரன்’
சுப்பிரமணியபுரம், நாடோடிகள், குட்டிப்புலி, தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையதேவா உள்பட பல படங்களில் நடித்துள்ள எம்.சசிகுமார் அடுத்து, ‘கொடிவீரன்’ என்ற புதிய படத்தை தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறார்.
சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 10-வது படம், இது. குட்டிப்புலி, கொம்பன், மருது ஆகிய படங்களை டைரக்டு செய்த முத்தையா, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். ‘குட்டிப்புலி’ படத்துக்குப்பின் டைரக்டர் முத்தையா, சசிகுமாருடன் இணைந்து பணிபுரியும் 2-வது படம், இது.
‘சாட்டை,’ ‘குற்றம் 23’ படங்களில் நடித்த மஹிமா கதாநாயகியாக நடிக்கிறார். விதார்த், பாலசரவணன், விக்ரம் சுகுமார், சனுஷா, பூர்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ‘குற்றம் 23’ படத்தின் தயாரிப்பாளர் இந்தர் குமார், வில்லன் கதாபாத் திரத்தில் நடிகராக அறிமுகம் ஆகிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, ரகுநந்தன் இசையமைக்கிறார்.
கிராமத்து வாழ்வியலுடன் காதல், பாசம், நட்பு ஆகிய மூன்றும் கலந்து ஜனரஞ்சகமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், படப்பிடிப்பு மதுரை அருகில் உள்ள மேலூரில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் டைரக்டர் முத்தையா தெரிவித்தார்.

Related Tags :
Next Story