ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்


ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
x
தினத்தந்தி 5 Jun 2017 3:22 PM IST (Updated: 5 Jun 2017 3:21 PM IST)
t-max-icont-min-icon

நகைச்சுவை-காதல்-கலாட்டாவுடன் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’

எம்.ஜி.ஆரின் ‘அன்பே வா’ படத்தில் இடம் பெற்ற ‘’ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” என்ற பாடல் வரியை ஒரு படத்துக்கு பெயராக சூட்டியிருக்கிறார்கள். இதில், ஆதவன் கதாநாயகனாக நடிக்கிறார். அவந்திகா கதாநாயகியாக நடிக்கிறார். இவர், சில மலையாள படங்களில் நடித்தவர். எம்.அழகுராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். கோவை ரவிச்சந்திரன் தயாரிக்க, இணை தயாரிப்பு: எம்.செந்தில் பாலசுப்பிரமணியம்.
‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ படத்தை பற்றி டைரக்டர் அழகுராஜ் சொல்கிறார்:-

“இது, நகைச்சுவை-காதல்-கலாட்டா படம். கதாநாயகன் ஆதவனும், நாயகி அவந்திகாவும் காதலர்கள். ஒரு சூழ்நிலையில் இருவரும் பிரிகிறார்கள். அவந்திகாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அதை தடுத்து நிறுத்த ஆதவன் ஒரு கும்பலுடன் செல்கிறார். வழியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளே கதை.

ஒரே நாளில் நடந்து முடிவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படம் சென்னை, கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் வளர்ந்து இருக்கிறது.”
1 More update

Next Story