சென்னையில் ஒரு நாள்-2


சென்னையில் ஒரு நாள்-2
x
தினத்தந்தி 6 Jun 2017 1:27 PM IST (Updated: 6 July 2017 3:53 PM IST)
t-max-icont-min-icon

12 வருடங்களுக்குப்பின் சரத்குமார்-நெப்போலியன் இணைந்து நடிக்கிறார்கள்

2002-ம் ஆண்டில் வெளிவந்த ‘தென்காசி பட்டினம்,’ 2005-ல் வெளிவந்த ‘ஐயா’ ஆகிய படங்களில் கனமான கதாபாத்திரங்களில் இணைந்து நடித்த சரத்குமார்-நெப்போலியன் ஆகிய இருவரும் 12 வருடங்களுக்குப்பின், மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். அந்த படத்தின் பெயர், ‘சென்னையில் ஒரு நாள்-2.’

சரத்குமார் நடித்து வெற்றி பெற்ற ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தைப் போல் இதுவும் பரபரப்பான திகில் படம் என்பதால் இந்த படத்துக்கு, ‘சென்னையில் ஒரு நாள்-2’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய ஒரு நாவலை தழுவிய கதை இது. இதில் சரத்குமார் ரகசிய உளவாளியாக நடிக்கிறார். அவருடன் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார், சுஹாசினி. மூத்த நடிகர்களான சரத்குமார், நெப்போலியன், சுஹாசினி ஆகிய மூன்று பேரும் இணைந்து நடிப்பதால், இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. படப்பிடிப்பு கோவையில் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.

ராம் மோகன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஜே.பி.ஆர். டைரக்டு செய்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். ராண் இசையமைக்கிறார். முனீஸ்காந்த், அஞ்சனா பிரேம், ராஜசிம்மன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ‘நிசப்தம்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
1 More update

Next Story