வானில் தேடி நின்றேன்


வானில் தேடி நின்றேன்
x
தினத்தந்தி 20 Jun 2017 5:05 PM IST (Updated: 20 Jun 2017 5:05 PM IST)
t-max-icont-min-icon

தியாகராஜன் டைரக்‌ஷனில் ‘வானில் தேடி நின்றேன்’ என்ற பெயரில்

‘குயின்’ படம் தமிழில் தயாராகிறது இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெளியான ‘குயின்’ படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் குவித்தது. சுதந்திர உணர்வுடன் வாழ விரும்பும் ஒரு பெண்ணும் ,அவள் வாழ்க்கையில் நடக்கும் சம்பங்களுமே இந்த படத்தின் கதை. ஒரு இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்தன்று அந்த பெண் மணமகன் முன்னிலையில் எல்லோருடனும் சேர்ந்து நடனம் ஆடுகிறாள். இது, மணமகனுக்கு கோபத்தை ஏற்படுத்த-திருமணத்தை நிறுத்தி விடுகிறான். தேனிலவுக்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்த அமெரிக்காவுக்கு அவள் தனியாக பயணமாகிறாள். அப்போது அவளுக்கு 4 இளைஞர்கள் பழக்கமாகிறார்கள். இதனால் அவள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது? அவளுக்கு திருமணம் நடந்ததா? என்பது மீதி கதை இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாரிக்கும் உரிமையை கோல்டன் கிராப் மற்றும் நடிகர் தியாகராஜனின் ஸ்டார் மூவிஸ் பட நிறுவனங்கள் வாங்கி உள்ளன. தமிழில் இந்த படத்துக்கு, ‘வானில் தேடி நின்றேன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. தியாகராஜனே டைரக்டு செய்கிறார். (முன்னதாக இந்த படத்தை நடிகை ரேவதி டைரக்டு செய்வார் என்று கூறப்பட்டது.) இதில். கதாநாயகியின் தந்தையாக நாசர் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள்  சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

1 More update

Next Story