சொல்லிவிடவா


சொல்லிவிடவா
x
தினத்தந்தி 20 Jun 2017 5:46 PM IST (Updated: 20 Jun 2017 5:46 PM IST)
t-max-icont-min-icon

அர்ஜுன் இயக்கிய ‘காதலின் பொன்வீதியில்’ ‘சொல்லிவிடவா’ என்று பெயர் மாறியது

ஐஸ்வர்யா அர்ஜுன் அர்ஜுன் நடிகர்-டைரக்டர்-தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர், அர்ஜுன். இவர் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிப்பில், ‘காதலின் பொன் வீதியில்’ என்ற படத்தை தயாரித்து டைரக்டு செய்து வந்தார். இந்த படத்தின் பெயர் தற்போது, ‘சொல்லிவிடவா’ என்று மாற்றப்பட்டுள்ளது. படத்தை பற்றி அர்ஜுன் சொல்கிறார்:-

“இளமை ததும்பும் காதல், கலர்புல் காமெடி, அனல் பறக்கும் சண்டைகள், சுவாரஸ்யமான திருப்பங்கள் என அனைத்து ரசிகர்களையும் கவரும் படம், இது. இதில், இளமை துடுக்கான வேடத்தில் ஐஸ்வர்யா நடித்து இருக்கிறார். சந்தன், கதா நாயகனாக அறிமுகமாகிறார். சுஹாசினி, டைரக்டர் கே.விஸ்வநாத், பிரகாஷ்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, சதீஷ், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்து இருக்கிறார். படப் பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகின்றன.”

1 More update

Next Story