மேற்கு தொடர்ச்சி மலை

விஜய் சேதுபதி சொந்த படம் ‘மேற்கு தொடர்ச்சி மலை’
விஜய் சேதுபதி தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் சொந்த பட நிறுவனம் தொடங்கி இருக்கிறார். இந்த பட நிறுவனம் சார்பில், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற பெயரில், அவர் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இது, மலைவாழ் மக்களை பற்றிய கதை. புதுமுகங்கள் அந்தோணி, காயத்ரி கிருஷ்ணா, அபு வலயாங்குளம், ஆறு பாலா, அந்தோணி வாத்தியார், அரண்மனை சுப்பு, செல்வமுருகன், ரமேஷ், மாஸ்டர் சுமித் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை-திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார், லெனின் பாரதி. இளையராஜா இசையமைக்கிறார். தேனி ஈஷ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை.
Related Tags :
Next Story






