கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா


கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா
x
தினத்தந்தி 16 Aug 2017 7:40 AM GMT (Updated: 16 Aug 2017 7:40 AM GMT)

‘கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக பாக்யராஜ், காட்டுவாசியாக மன்சூர்அலிகான்!

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம், ‘கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா.’ இது, ஒரு நகைச்சுவை படம். படத்தை டைரக்டு செய்திருக்கும் ராஷாகான் கூறியதாவது:-

“வாழ்க்கையில் விரக்தி அடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் 4 முதியவர்களுக்கு அதிக தொகைக்கு பெரிய வேலை வருகிறது. இதை முடிக்க 4 முட்டாள் இளைஞர்களின் உதவியை நாடுகிறார்கள். அந்த இளைஞர்களின் செயல்பாடுகளால், 4 முதியவர்களும் சமூகத்தில் பயங்கர வாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். அதில் இருந்து அந்த முதியவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள்? என்பதே இந்த படத்தின் கதை.

கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய 6 டைரக்டர்கள் முதியவர்களாக நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் பாடகர் மனோவின் மகன் ரத்திஷ், மற்றும் கண்ணன் ராஜ், விஷ்வா ஆகியோரும் நடித்துள்ளனர்.

கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசிகள் தலைவராகவும், பவர் ஸ்டார் சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்து இருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இந்த படத்தில் திகில், சண்டை காட்சிகள் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்காடு, கொல்லிமலை பகுதிகளில் படம் வளர்ந்து இருக்கிறது.”

Next Story