ஜருகண்டி


ஜருகண்டி
x
தினத்தந்தி 22 Nov 2017 11:48 AM IST (Updated: 22 Nov 2017 11:48 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் நிதின் சத்யா இவரின் சொந்த படமான ‘ஜருகண்டி’ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறார்.

நிதின் சத்யாவின் ‘ஜருகண்டி’

‘சத்தம் போடாதே,’ ‘ராமன் தேடிய சீதை,’ ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்,’ ‘சென்னை-28’ ஆகிய படங்களில் நடித்தவர், நிதின் சத்யா. இவர் சொந்த பட நிறுவனம் தொடங்கி, ‘ஜருகண்டி’ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறார். படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-

“இது, பிற மொழி வார்த்தையாக இருந்தாலும், தமிழ்நாட்டிலும் இது பிரபலமான வார்த்தையாக இருந்து வருகிறது. கதை, சுவாரஸ்யமாகவும், அசத்தலாகவும் அமைந்துள்ளது. கதாநாயகன்-கதாநாயகி இருவரும் வெளிநாடு சென்று சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசையே அவர்களை ஒரு பிரச்சினையில் சிக்க வைக்கிறது. பிரச்சினையில் இருந்து இருவரும் வெளியே வந்தார்களா? என்பது கதை. வளர்ந்து வரும் ஜெய்யின் சினிமா வாழ்க்கையில், ‘ஜருகண்டி’ ஒரு முக்கிய படமாக இருக்கும்.

படத்தில் ஜெய் ஜோடியாக ரேபா ஜான் நடிக்கிறார். ரோபோ சங்கர், டேனி, இளவரசு, மைம்கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். போபோ சஷி இசையமைக்கிறார். பிச்சுமணி டைரக்டு செய்கிறார். அவர் எவ்வளவு திறமையானவர் என்பதை இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் அறிவார்கள். படத்தின் இணை தயாரிப்பாளர், பத்ரி கஸ்தூரி.”
1 More update

Next Story