விசிறி


விசிறி
x
தினத்தந்தி 22 Nov 2017 12:55 PM IST (Updated: 22 Nov 2017 12:55 PM IST)
t-max-icont-min-icon

தலைமுறை தலைமுறையாக தொடரும் ரசிகர்கள் மோதலை கதையாக கொண்ட படம், ‘விசிறி.’

தனது முதல் படமான ‘அரும்பு மீசை குறும்பு பார்வை’ படத்தில் விடுதி மாணவர்களின் வாழ்வியலையும், 2-வது படமான ‘வெண்ணிலா வீடு’ படத்தில் நடுத்தர குடும்ப பெண்களின் வாழ்வியலையும் பதிவு செய்த வெற்றி மகாலிங்கம் டைரக்டு செய்து இருக்கிறார்.
படம் குறித்து டைரக்டர் வெற்றி மகாலிங்கம் கூறுகிறார்:-

“தமிழ் சினிமாவின் முதல் ‘சூப்பர் ஸ்டார்’களான தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா ஆகிய இரண்டு பேரின் ரசிகர்கள் இடையே தொடங்கிய மோதல், எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் என்று தொடர்ந்தது. இப்போது அது விஜய்-அஜித் ரசிகர்கள் இடையே தொடர்கிறது. இந்த மோதலை கருவாக வைத்து, ‘விசிறி’ படத்தை இயக்கியிருக்கிறேன்.

அஜித் ரசிகராக ‘அழகி’ படத்தில் குட்டி பார்த்திபனாக நடித்த ‘ராம் சரவணா, விஜய் ரசிகராக விஸ்காம் மாணவரான ராஜ் சூர்யா ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இத்தாலி நாட்டில் வசிக்கும் தமிழ் பெண்ணான ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். விஜய் கிரண் ஒளிப்பதிவு செய்ய, தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் ஆகிய மூன்று பேரும் இசையமைத்துள்ளனர்.

விஜய்-அஜித் ரசிகர்கள் இடையே ஏற்படும் மோதலையும், அதற்குள் ஒரு காதலையும் திரைக்கதை ஆக்கியிருக்கிறோம். ஏ.ஜமால் சாஹிப், ஏ.ஜாபர் சாதிக் ஆகிய இருவருடன் இணைந்து வெற்றி மகாலிங்கம் தயாரித்து இருக்கிறார். படத்தின் கதை-திரைக்கதை- டைரக்‌ஷன் பொறுப்புகளையும் இவரே ஏற்றுள்ளார். பித்தாக் புகழேந்தி வசனம் எழுதியிருக்கிறார். படத்தின் இணை தயாரிப்பு: பூமா கஜேந்திரன், எஸ்.சரஸ்வதி சரண்ராஜ், என்.கே.ராஜேந்திர பிரசாத்.
1 More update

Next Story