ஜுங்கா


ஜுங்கா
x
தினத்தந்தி 22 Nov 2017 1:10 PM IST (Updated: 22 Nov 2017 1:09 PM IST)
t-max-icont-min-icon

'ஜுங்கா' விஜய் சேதுபதியின் சொந்த பட நிறுவனமே தயாரிப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’

படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பே வியாபாரம் ஆனது
விஜய் சேதுபதி நடித்து வெற்றி பெற்ற படங்களில், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’வும் ஒன்று. அதில், விஜய் சேதுபதி ஜோடியாக நந்திதா நடித்து இருந்தார். கோகுல் டைரக்டு செய்திருந்தார். சித்தார்த் விபின் இசையமைத்து இருந்தார். இந்த மூன்று பேரும் மீண்டும் ‘ஜுங்கா’ என்ற புதிய படத்தில் இணைந்து இருக்கிறார்கள்.

‘வனமகன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாயிஷா, ‘ஜுங்கா’ படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். கோகுல் டைரக்டு செய்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு பாரீஸ் நகரில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.

இதுவரை விஜய் சேதுபதி நடித்துள்ள படங்களை விட, அதிக பொருட்செலவில், பிரமாண்டமாக தயாராகி வருகிறது, ‘ஜுங்கா.’ இந்த படத்தை விஜய் சேதுபதியின் சொந்த பட நிறுவனமே தயாரிப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படம் வியாபாரமாகி விட்டது. ஏ அன்ட் பி குரூப்ஸ் மிகப்பெரிய விலை கொடுத்து, ‘ஜுங்கா’ படத்தை வெளியிடும் உரிமையை வாங்கியிருக்கிறது.
1 More update

Next Story