6 அத்தியாயம்


6 அத்தியாயம்
x
தினத்தந்தி 25 Feb 2018 12:34 AM IST (Updated: 25 Feb 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

கேபிள் சங்கர் - அஜயன் பாலா உள்ளிட்ட 6 பேர் இயக்கத்தில் அமானுஷ்ய கதைகளின் அதிரடி தொகுப்பாக உருவாகி இருக்கும் ‘6 அத்தியாயம்’ படத்தின் முன்னோட்டம்.

ஆறு அமானுஷ்ய கதைகளை கொண்டு உருவான படம் ‘6 அத்தியாயம்’.
“இதில் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் தமன், விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், சஞ்சய், வினோத், பேபிசாதன்யா, இன்னும் பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - சி.ஜே.ராஜ்குமார், பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோராஜா (தலா ஒரு அத்தியாயம்). இசை - தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் பிராங்க்ளின், சதீஷ் குமார்.

எழுத்தாளரும், இயக்குனருமான கேபிள் சங்கர் ஒரு அத்தியாயத்தை எழுதி இயக்கியிருக்கிறார். நிர்வாக தயாரிப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். இன்னொரு அத்தியாயத்தை எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட பிரபலம் ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோர் 4 அத்தியாயங்களை இயக்கியுள்ளனர். ஆறு இயக்குனர்கள் இயக்கியுள்ள, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் படத்தில் இறுதியாக வரும் கிளைமாக்சில் தனித்தனியாக சொல்லப்படுகிறது” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
1 More update

Next Story