சுந்தரபாண்டியன்-2


சுந்தரபாண்டியன்-2
x
தினத்தந்தி 1 April 2018 10:50 PM IST (Updated: 1 April 2018 10:50 PM IST)
t-max-icont-min-icon

சசிகுமார்- எஸ்.ஆர்.பிரபாகரன் கூட்டணியில் ‘சுந்தரபாண்டியன்-2’

கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படங்களில், ‘சுந்தர பாண்டியன்’ படமும் ஒன்று. சசிகுமாரின் திரைப்பயணத்தில், இது முக்கிய படமாக அமைந்தது.

‘சுப்பிரமணியபுரம்,’ ‘ஈசன்’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.ஆர்.பிரபாகரனை இந்த படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகம் செய்தார், சசிகுமார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த எஸ்.ஆர்.பிரபாகரன் தொடர்ந்து, உதயநிதி நடித்த ‘இது கதிர்வேலன் காதல்,’ விக்ரம் பிரபு நடித்த ’சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கி தனது அடையாளத்தை பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து சசிகுமார்-எஸ்.ஆர்.பிரபாகரன் கூட்டணி, ‘சுந்தரபாண்டியன்-2’ படத்தில் இணைகிறது. இதுபற்றி டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகரன் கூறியதாவது:-

“சுந்தரபாண்டியன் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று எங்களை சந்திக்கிற ரசிகர்கள் கேட்டு வந்தார்கள். குறிப்பாக தென் மாவட்ட ரசிகர்கள், ‘சுந்தர பாண்டியன்-2’ படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார் கள். அவர்களின் விருப்பம் விரைவில் நிறைவேறப் போகிறது.

தற்போது சசிகுமார், ‘நாடோடிகள்-2’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை சமுத்திரக்கனி டைரக்டு செய்து வருகிறார். படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது. அந்த படம் முடிவடைந்ததும் சசிகுமார், ‘சுந்தரபாண்டியன்-2’ படத்தில் நடிப்பார்.”
1 More update

Next Story