என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா


என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா
x
தினத்தந்தி 1 April 2018 10:56 PM IST (Updated: 1 April 2018 10:56 PM IST)
t-max-icont-min-icon

அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ் படம் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’

தென்னிந்திய திரைப்பட கதாநாயகர்களில் சிலர் தங்கள் மொழியை தாண்டி, பிற மொழி படங்களில் நடித்து தடம் பதிக்க வேண்டும் என்று விரும்பு கிறார்கள். அந்த வகையில், பிரபல தெலுங்கு பட நாயகர்கள் மகேஷ்பாபு, பிரபாஸ் ஆகிய இருவரை தொடர்ந்து வேறு சில தெலுங்கு பட நாயகர்களும் தமிழ் படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தெலுங்கு திரையுலகின் இன்னொரு பிரபல நாயகனான அல்லு அர்ஜுன், ஒரு புதிய தமிழ் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அவர் நடிக்கும் தமிழ் படத்துக்கு, ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

படத்தில் அவர் ராணுவ வீரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். சரத்குமார், அர்ஜுன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் சாய்குமார், சாருஹாசன், ஹரிஷ் உத்தமன், நதியா ஆகியோரும் நடிக்கிறார்கள். வம்சி டைரக்‌ஷனில், ராஜீவ் ரவி ஒளிப்பதிவில், விஷால்-சேகர் ஆகிய இருவரும் இசையமைக்கிறார்கள். கே.நாகபாபு, பி.வாசு இணை தயாரிப்பில், லகடப்பாடி ஸ்ரீஷா ஸ்ரீதர் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில், இந்த படம் தயாராகிறது.
1 More update

Next Story