முன்னோட்டம்
என் ஜி கே

என் ஜி கே
ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால் பா.இரஞ்சித் சந்தோஷ் நாராயணன் முரளி G.
“சூர்யாவுடன் நடிப்பது கனவு போல் இருக்கிறது!”- சாய் பல்லவி
Chennai
சூர்யா கதாநாயகனாக நடிக்க, ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படத்துக்கு, ‘என் ஜி கே’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் கடந்த மாதம் தொடங்கியது. இப்போது சென்னையில், அம்பாசமுத்திரம் நகரம் போன்ற பிரமாண்டமான அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

இதில், சூர்யாவுடன் சாய் பல்லவி நடித்து வருகிறார். சூர்யா ஜோடியாக நடிப்பது பற்றி அவர் கூறுகிறார்:-

“நான், சூர்யாவின் தீவிர ரசிகை. ‘காக்க காக்க’ படம் வெளியான நேரத்தில் இருந்து அவர் மீது எனக்கு மிகப்பெரிய ரசனை. இப்போது அவருக்கு ஜோடியாக நடிக்கிறேன். இது, ஒரு கனவு போல் இருக்கிறது. முதல் தடவை அவரை படப்பிடிப்பு தளத்தில் வைத்து பார்த்தபோது, எனக்கு பேச்சே வரவில்லை.

அவருடன் நடிப்பதை கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன். என் அபிமான நடிகரான சூர்யாவுடன் நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.

டைரக்டர் செல்வராகவன், அவருக்கு என்ன வேண்டுமோ அதை சரியாக கேட்டு வாங்கி விடுகிறார். அவர் நினைத்தது வருகிற வரை பொறுமையாக இருக்கிறார். ஒரு காட்சியை 100 தடவை வேண்டுமானாலும் படமாக்கி கொள்ளலாம். அவர் எதிர்பார்க்கும் நடிப்பு வந்தால்தான் மக்களுக்கு அந்த கதாபாத்திரம் புரியும் என்பது, அவருடைய ஸ்டைல்.”

விமர்சனம்

விஸ்வாசம்

மகளின் லட்சியம் நிறைவேற உதவும் அப்பா. படம் ‘விஸ்வாசம்’ கதாநாயகன் அஜித்குமார், கதாநாயகி நயன்தாரா, டைரக்‌ஷன் சிவா இயக்கியுள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் விமர்சனம்.

பேட்ட

நண்பர் குடும்பத்தை உயிர் பணயம் வைத்து காப்பாற்றும் ஒரு மாவீரன். படம் ‘ பேட்ட’ கதாநாயகன் ரஜினிகாந்த், கதாநாயகிகள் திரிஷா, சிம்ரன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ பேட்ட’ படத்தின் விமர்சனம்.

மாரி–2

போதை பொருள் கடத்தல் கும்பலும், அதற்கு எதிரான கதாநாயகனும். படம் "மாரி–2" கதாநாயகன் தனுஷ், கதாநாயகி சாய்பல்லவி, டைரக்‌ஷன் பாலாஜி மோகன் இயக்கியுள்ள மாரி–2 படத்தின் விமர்சனம்.

மேலும் விமர்சனம்