நீயா-2


நீயா-2
x
தினத்தந்தி 1 April 2018 11:57 PM IST (Updated: 1 April 2018 11:57 PM IST)
t-max-icont-min-icon

‘நீயா-2’ படத்தில் பாம்பு பெண்ணாக வரலட்சுமி

கமல்ஹாசன்-ஸ்ரீப்ரியா நடிப்பில், 1979-ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம், ‘நீயா.’ திகில் படங்களுக்கு இந்த படம், ஒரு முன்னோடி. 39 வருடங்களுக்குப்பின், அந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘நீயா-2’ என்ற பெயரில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. எல்.சுரேஷ் டைரக்டு செய்கிறார். இவர், ‘எத்தன்’ படத்தை டைரக்டு செய்தவர். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“கதைக்கு தேவைப்பட்டதால், ‘நீயா-2’ என்று படத்துக்கு பெயர் சூட்டியிருக்கிறோம். இதில், 22 அடி நீளம் உள்ள ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. அதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும், ஒளிப்பதிவாளரும் இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பாங்காக்கில், ஒரு ராஜநாகத்தை பார்த்தோம்.

அதன் அமைப்பு, உடல் மொழி என அனைத்தையும் பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டோம். அது படம் முழுக்க வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளது. படத்தின் கதாநாயகனாக ஜெய் நடிக்கிறார். அவருக்கு வித்தியாசமான வேடம். இரண்டு விதமான பரிமாணத்தில் அவர் படம் முழுக்க வருகிறார்.

பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார். அவருடன் ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா ஆகிய 2 பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். பாலசரவணன், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்றது. தொடர்ந்து சென்னை, மதுரை, கொடைக்கானல், சாலக்குடி, தலக்கோணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார். ஷபிர் இசையமைக்கிறார்.
1 More update

Next Story