சாம்பியன்


சாம்பியன்
x
தினத்தந்தி 25 Jun 2018 12:02 AM IST (Updated: 25 Jun 2018 12:02 AM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரன் டைரக்‌ஷனில் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து ‘சாம்பியன்’ என்ற பெயரில், ஒரு புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

விளையாட்டுகளை கருவாக கொண்ட ‘வெண்ணிலா கபடி குழு,’ ‘ஜீவா’ ஆகிய படங்களை டைரக்டு செய்த சுசீந்திரன் தற்போது, ‘சாம்பியன்’ என்ற பெயரில், ஒரு புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார். இது, கால்பந்து விளையாட்டை மையமாக கொண்ட படம்.

புதுமுகம் ரோஷன் கதாநாயகனாகவும், மிருணாளினி கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் நடிகர் விஷாலின் தந்தையும், பட அதிபருமான ஜி.கே.ரெட்டி, ‘அஞ்சாதே’ நரேன், ஆர்.கே.சுரேஷ், ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

அரோல் குரோலி இசையமைக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் விஜயன் படத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பில் கே.ராகவி தயாரிக்கிறார். படத்தை டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
1 More update

Next Story