தாதா கும்பலை சேர்ந்த அழகியாக சுருதிஹாசன்


தாதா கும்பலை சேர்ந்த அழகியாக சுருதிஹாசன்
x
தினத்தந்தி 25 Jun 2018 12:13 AM IST (Updated: 25 Jun 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

இந்தி பட உலகில் புகழ் பெற்ற டைரக்டர்களில் ஒருவர், மகேஷ்பாபு மஞ்ச்ரேக்கர். இவர், தாதாக்களின் மோதலை அடிப்படையாக வைத்து, ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இதில், சுருதிஹாசன் தாதா கும்பலை சேர்ந்த ஒரு அழகியாக நடிக்கிறார்.

வித்யுத் ஜமால் கதாநாயகனாக நடிக்கிறார். வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று முடிவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்க இருக்கிறது. இதற்காக படக் குழுவினர் அனைவரும் கோவா சென்று இருக்கிறார்கள். சுருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கே படமாக்கப்பட உள்ளன.

இதுபற்றி டைரக்டர் மகேஷ்பாபு மஞ்ச்ரேக்கர் கூறிய தாவது:-

“பொதுவாக என் படத்தில் நடிக் கும் நடிகர்-நடிகைகள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும். அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும். இந்த படத்திலும் அது அமைந்து இருக் கிறது.

சுருதிஹாசனின் கதாபாத்திரம், மற்ற கதாபாத்திரங்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, சுருதிஹாசன் லண்டனில் சர்வதேச இசைக்கோர்ப்பு தொடர்பான பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். அந்த பணிகளை முடித்ததும், எங்கள் படத்தின் பணிகள் தொடங்கும்.

அதன் பிறகு அவருடைய தந்தை கமல்ஹாசன் இயக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில், சுருதிஹாசன் நடிப்பார்.”
1 More update

Next Story