தேவ்

‘தேவ்’ படத்துக்காக கார்த்தி நடித்த படுபயங்கர கார் துரத்தல் காட்சி, கார்த்தி நடித்து வந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில், அவர் தொடர்பான காட்சிகள் முழுவதும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.
இதைத்தொடர்ந்து அவர், ‘தேவ்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதில் கார்த்தியுடன் ரகுல் ப்ரீத்சிங், ரம்யாகிருஷ்ணன், அம்ருதா, பிரகாஷ்ராஜ், ‘டெம்பர்’ படத்தின் வில்லன் வம்சி ரவி ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார்.
அறிமுக டைரக்டர் ரஜத் ரவிஷங்கர் இயக்குகிறார். ‘சிங்கம்-2,’ ‘மோகினி’ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ், ‘தேவ்’ படத்தை தயாரித்து வருகிறது. ரூ.55 கோடி செலவில் படம் தயாராகிறது.
படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறுகிறது. கார்த்தி நடித்த படுபயங்கரமான கார் துரத்தல் காட்சி அங்கு படமாக்கப் பட்டது. ஒரு பாடல் காட்சியும் அங்கு படமாக இருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு இமயமலையில் நடக்க இருக்கிறது. அதிரடி சண்டை காட்சிகள் அங்கே படமாக இருக்கிறது. மும்பை மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சில முக்கிய காட்சிகளை படமாக்குகிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

Related Tags :
Next Story