அருவா சண்ட


அருவா சண்ட
x
தினத்தந்தி 25 Jun 2018 12:23 AM IST (Updated: 25 Jun 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

‘அருவா சண்ட’ படத்துக்காக வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்.

‘சிலந்தி,’ ‘ரணதந்த்ரா’ ஆகிய படங்களை தொடர்ந்து ஆதிராஜன் கதை-திரைக்கதை-வசனம்-டைரக்‌ஷனில், ‘அருவா சண்ட’ என்ற படம் தயாராகி இருக்கிறது. படத்தை பற்றி டைரக்டர் ஆதிராஜன் சொல்கிறார்:-

‘‘கபடி விளையாட்டையும், கவுரவ கொலை களையும் பின்னணியாக கொண்ட அதிரடி படமாக, ‘அருவா சண்ட’ தயாராகி உள்ளது. படத்தின் உச்சக்கட்ட காட்சி, சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக, உணர்வுப்பூர்வமாக படமாக்கப்பட்டு இருக்கிறது. அந்த காட்சிக்காகவே சரண்யா பொன்வண்ணனுக்கு தேசிய விருது கிடைக்கும்.

இந்த படத்துக்காக கவிஞர் வைரமுத்து 3 அட்டகாசமான பாடல்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய ‘‘சிட்டு சிட்டு குருவி வாலாட்டுதோ...தொட்டு தொட்டு இழுத்து தாலாட்டுதோ’’ என்று தொடங்கும் பாடலை தரண் இசையில், நடிகை ரம்யா நம்பீசன் பாடியிருக்கிறார். அவருடன் இணைந்து பாலாஜி ஸ்ரீயும் பாடினார். இந்த பாடல், காதலர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு உட்காரும். கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில், அந்த பாடல் காட்சி படமானது. புதுமுகம் ராஜா-மாளவிகா மேனன் ஆகிய இருவரும் பாடல் காட்சியில் நடித்தனர்.

வி.ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில், ‘ஆடுகளம்’ நரேன், சவுந்தர்ராஜா, கஞ்சா கருப்பு, மாரிமுத்து, ‘காதல்’ சுகுமார், சுஜாதா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.’’
1 More update

Next Story