பத்து செகன்ட் முத்தம்


பத்து செகன்ட் முத்தம்
x
தினத்தந்தி 25 Jun 2018 12:45 AM IST (Updated: 25 Jun 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

வின்சென்ட் செல்வா டைரக்‌ஷனில் `பத்து செகன்ட் முத்தம்' இவர், சில வருட இடைவெளிக்குப்பின் ஒரு புதிய படத்தை தயாரித்து டைரக்டு செய்திருக்கிறார்.

புதுமுகங்கள் சரீஸ், கீதா ஆகியோருடன் தம்பி ராமய்யா.
பிரியமுடன், வாட்டாக்குடி இரண்யன், யூத், ஜித்தன் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், வின்சென்ட் செல்வா. இவர், சில வருட இடைவெளிக்குப்பின் ஒரு புதிய படத்தை தயாரித்து டைரக்டு செய்திருக்கிறார். படத்துக்கு, `பத்து செகன்ட் முத்தம்'என்று பெயர் சூட்டியிருக்கிறார். படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-

``வன்முறையை, வன்முறையால்தான் அழிக்க முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்ட `சஸ்பென்ஸ்'-திகில் படம், இது. ஒரு பெண் தனது வாழ்க்கையில் யாரும் சந்தித்திராத ஒரு பிரச்சினையை சந்திக்கிறாள். அது என்ன பிரச்சினை? என்று யாரிடமும் சொல்ல முடியாத சூழ்நிலை. அந்த பெண் தனித்து நின்று போராடி, எப்படி வெற்றி பெறுகிறாள்? என்பதே கதை.

கொச்சியை சேர்ந்த சரீஸ் என்ற இளைஞரும், கோட்டயத்தை சேர்ந்த கீதா என்ற அழகியும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள். தம்பிராமய்யா, ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். `மிஸ்டர் இந்தியா' பட்டம் வென்ற சீனிவாஸ் வில்லனாக நடித்து இருக்கிறார்.

கதை-வசனத்தை ரூபன் எழுத, வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, திரைக்கதை-டைரக்‌ஷன்: வின்சென்ட் செல்வா. லட்சுமி டாக்கீஸ் தயாரிக்கிறது. கொடைக்கானல், வாகமன், ஐதராபாத் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.
1 More update

Next Story