இட்லி


இட்லி
x
தினத்தந்தி 29 Jun 2018 11:59 PM IST (Updated: 29 Jun 2018 11:59 PM IST)
t-max-icont-min-icon

சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, மறைந்த கல்பனா ஆகிய மூன்று பேரும் தோழிகள். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து துப்பாக்கி முனையில் மிரட்டி, ஒரு வங்கியை கொள்ளையடிப்பது போன்ற காட்சி, ‘இட்லி’ படத்தில் இடம் பெறுகிறது.

சரண்யா-கோவை சரளா-கல்பனாவுடன் வயதான 3 பாட்டிகளின் கதை இதுபற்றி படத்தின் டைரக்டர் வித்யாதரன் கூறியதாவது:- “இது, வயதான 3 பாட்டிகளின் கதை. அந்த பாட்டிகளாக சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா ஆகிய மூன்று பேரும் நடித்து இருக்கிறார்கள். இவர்கள் கதாபாத்திரங்களின் பெயர்கள் இன்பா, ட்விங்கிள், லில்லி. இந்த மூன்று பெயர்களின் முதல் எழுத்துக்களையும் சேர்த்து, ‘இட்லி’ என்று படத்துக்கு பெயர் சூட்டியிருக்கிறோம்.

இது, முழுக்க முழுக்க நகைச்சுவை படம். ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, டெல்லி கணேஷ், மன்சூர் அலிகான், சித்ராலட்சுமணன், மனோபாலா, சாமிநாதன், இமான் அண்ணாச்சி, பாண்டு, கிரேன் மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர். 29 நாட்களில், முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது. அப்பாஸ் தூயவன் தயாரித்துள்ளார்.

படத்தில், கதாநாயகன்-கதாநாயகி என்று யாரும் கிடையாது. அதேபோல் பாடல்களும் இல்லை. ஆனால், காதல் இருக்கிறது. மற்ற எல்லாவற்றையும் விட, விதி வலிமையானது என்ற கருவை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களுடன், சமூகத்துக்கு தேவையான ஒரு கருத்தையும் படத்தில் சொல்லியிருக்கிறோம். படம், நவம்பர் மாதம் திரைக்கு வரும்.”

பாபு தூயவன் மற்றும் ஜி.கார்த்திக் அப்பு மூவீஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரன் இசையமைத்துள்ளார்.  
1 More update

Next Story