முன்னோட்டம்
கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கம்
கார்த்தி, சத்யராஜ் சாயிஷா, பானுப்ரியா, பாண்டிராஜ் டி.இமான் வேல்ராஜ்
“இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக, சாயிஷா நடிக்கிறார். சத்யராஜ், கார்த்தி இருவரும் மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார்கள். பானுப்ரியா, பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
Chennai
நடிகர் சூர்யா தயாரிக்க, அவருடைய தம்பி கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படம், ‘கடைக்குட்டி சிங்கம்.’ இந்த படத்துக்கு, ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டது ஏன்? என்பது பற்றி டைரக்டர் பாண்டிராஜ் கூறியதாவது:-

கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். அக்காள்களாக மவுனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி ஆகிய 5 பேரும் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார், ஒளிப்பதிவு வேல்ராஜ்.

“ படத்தில் கார்த்தி மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் விவசாயியாக வருகிறார். தான் ஒரு விவசாயி என்பதை பெருமையுடன் வெளியில் சொல்லிக் கொள்ளும் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார். படம் திரைக்கு வந்தபின், நிறைய இளைஞர்கள் விவசாய தொழிலுக்கு வருவார்கள்.

கார்த்தி, சூர்யாவின் தம்பி என்பதால் படத்துக்கு, ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று பெயர் வைத்து இருக்கிறார்கள் என்பதில் உண்மை இல்லை. படத்தில் கார்த்தி, 5 அக்காள்களின் கடைசி தம்பியாக வருவதால்தான் இந்த பெயரை சூட்டியிருக்கி றோம். படம் வேகமாக வளர்ந்து வருகிறது.”

விமர்சனம்

டிக் டிக் டிக்

தமிழில் தயாராகியிருக்கும் முதல் விண்வெளி படம். "டிக் டிக் டிக்" ஆகாயத்தில் இருந்து ஒரு விண்கல் பூமியில் விழுந்து நிறைய சேதத்தை ஏற்படுத்துகிறது படத்தின் சினிமா விமர்சனம்.

டிராபிக் ராமசாமி

சமூக போராளி, ‘டிராபிக் ராமசாமி’யின் வாழ்க்கை சம்பவங்கள், அவருடைய பெயரிலேயே படமாகி இருக்கிறது.

காலா

மும்பை தாராவி தமிழர்களை காப்பாற்றி வரும் தமிழ் தாதாவும், அதை கையகப்படுத்த முயற்சிக்கும் வில்லனும். படம் "காலா" கதைநாயகன் ரஜினிகாந்த்,நாயகி ஈஸ்வரிராவ், ஹூமா குரேசி, டைரக்‌ஷன் பா.ரஞ்சித் படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

மேலும் விமர்சனம்