கொரில்லா


கொரில்லா
x
தினத்தந்தி 16 July 2018 10:35 PM IST (Updated: 16 July 2018 10:35 PM IST)
t-max-icont-min-icon

ஜீவா-ஷாலினி பாண்டே ஜோடியாக நடிக்க, ஒரு மனித குரங்கு முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம், ‘கொரில்லா.’ இந்த படத்தை சாண்டி டைரக்டு செய்து இருக்கிறார்.

“மனித குரங்கை நடிக்க வைக்க நாங்கள் பட்ட பாடு...’’ ‘ ஜீவா-ஷாலினி பாண்டே ஜோடியாக நடிக்க, ஒரு மனித குரங்கு முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம், ‘கொரில்லா.’ இந்த படத்தை சாண்டி டைரக்டு செய்து இருக்கிறார். இவர், ‘மகாபலிபுரம்’ என்ற படத்தை டைரக்டு செய்தவர். ‘கொரில்லா’ படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

‘‘இது, ஒரு வங்கி கொள்ளையை கருவாக கொண்ட நகைச்சுவை திகில் படம். ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோருடன் ஒரு மனித குரங்கும் நடித்து இருக்கிறது. சம்பவங்கள் முழுவதும் சென்னை தாம்பரத்தில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் இருந்து உல்லாசப்பயணம் செல்லும் 3 நண்பர்கள் வாழ்க்கையில், ஒரு மனித குரங்கு குறுக்கிடுகிறது. அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை கதை சித்தரிக்கிறது. அந்த மனித குரங்கு, சில ஹாலிவுட் படங்களில் நடித்து இருக்கிறது. அது சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதற்காக, பாங்காக் சென்றோம்.

குரங்கை நடிக்க வைக்க நாங்கள் பட்ட பாடு...அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. தினமும் குரங்கின் ‘மூட்’ பார்த்து, அதன் மனநிலை அறிந்து படப்பிடிப்பை நடத்தினோம். நமக்காகத்தான் காத்திருக்கிறார்கள் என்பதை அது புரிந்து கொள்கிறது. காலையில் வந்ததும், என்னைப் பார்த்து கும்பிடும். அடுத்து, ஜீவாவுக்கு ஒரு கும்பிடு போடும். அந்த குரங்கிடம் அடியும், கடியும் வாங்கி, ஜீவா நடித்தார்.

படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்து இருக்கிறார். ‘மசாலா படம்,’ ‘ரம்’ ஆகிய படங்களை தயாரித்த விஜய் ராகவேந்திரா, இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.’’
1 More update

Next Story