இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு


இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
x
தினத்தந்தி 17 July 2018 10:29 PM IST (Updated: 17 July 2018 10:29 PM IST)
t-max-icont-min-icon

விமல்-ஆஷ்னா சவேரி ஜோடியுடன் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ ஏ.ஆர்.முகேஷ் டைரக்டு செய்கிறார். படத்தின் முன்னோட்டம் பார்க்கலாம்.

களவாணி, கலகலப்பு, மன்னர் வகையறா உள்பட சில படங்களில் நடித்த விமலும், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் நடித்த ஆஷ்னா சவேரியும் ஒரு புதிய படத்தில் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். படத்துக்கு, ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஏ.ஆர்.முகேஷ் டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

“நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாகிறது. படம் பார்ப்பவர்களுக்கு ஜனரஞ்சகமான படத்தை பார்த்த திருப்தி ஏற்படும். எல்லா தரப்பு மக்களும் ரசிக்கிற மாதிரி இருக்கும். முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் 10 நாட்கள் நடைபெற்றது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

விமல்-ஆஷ்னா சவேரி ஜோடியுடன் ஆனந்தராஜ், சிங்கம்புலி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சர்மிளா மாண்ரே, ஆர்.சாவண்ட் ஆகிய இருவரும் தயாரிக் கிறார்கள்.”
1 More update

Next Story