காற்றின் மொழி


காற்றின் மொழி
x
தினத்தந்தி 17 July 2018 5:34 PM GMT (Updated: 17 July 2018 5:34 PM GMT)

ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில், சிம்பு நடித்திருக்கிறார்.

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிம்பு நடித்து இயக்கிய ‘மன்மதன்’ படம், 2004-ம் ஆண்டில் திரைக்கு வந்தது. அதில், கதாநாயகியாக ஜோதிகா நடித்து இருந்தார். அடுத்து, 2006-ம் ஆண்டில் வெளிவந்த ‘சரவணா’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்தார்கள்.

12 வருடங்களுக்குப்பின், மணிரத்னம் டைரக்டு செய்துள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்புவும், ஜோதிகாவும் இணைந்து நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், ராதாமோகன் இயக்கி வரும் ‘காற்றின் மொழி’ படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடித்து வருகிறார். இது, வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிய ‘துமாரி சூலு’ என்ற இந்தி படத்தின் தழுவல். படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில், சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.

Next Story