பற


பற
x
தினத்தந்தி 21 July 2018 11:16 PM IST (Updated: 21 July 2018 11:16 PM IST)
t-max-icont-min-icon

சமூக போராளியாக சமுத்திரக்கனி! ‘பச்சை என்கிற காத்து, ‘மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கிய கீரா அடுத்து, ‘பற’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார்.

‘‘இது, அன்றாட வாழ்வில் தினசரி செய்திகளாக படித்தும், கேட்டும் கடந்து போகிற எளிய மக்களின் வலிமையான காதல் பற்றிய படம். பிளாட்பாரத்தில் வாழ வழியற்ற ஒருவனும், ஒரு கிராமத்தில் இருந்து கிளம்பும் காதலர்களும், வயதான காலத்தில் தனிமையில் இருந்து விடுபட கிளம்பும் முதியோர்களும், ஒரு திருடனும், ஒரு வழக்கறிஞரும், ஒரு கட்சி தலைவரும் பிரதான பாத்திரங்கள்.

இதில், சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும், அநீதிகளுக்கு எதிராக போராடும் வழக்கறிஞராக, தன் குழந்தையை பறிகொடுத்த தந்தையாகவும், காதலர்களின் காவலனாகவும் சமுத்திரக்கனி நடித்து வரு கிறார். அவருடன் சாந்தினி, முனீஸ்காந்த், ‘வழக்கு எண்’ முத்துராமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஒரு இரவில் தொடங்கி, ஒரு பகலில் முடியும் 12 மணி நேர கதை, இது. சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்ய, விமல்ராஜ் இசையமைக்கிறார். பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன், ரிஷி கணேஷ் ஆகிய மூவரும் தயாரிக்கிறார்கள். நாகர்கோவில், சென்னை ராயபுரம், எண்ணூர் சுற்றுவட்டாரங்களில் படம் வளர்ந்து வருகிறது.’’

1 More update

Next Story