நட்பே துணை


நட்பே துணை
x
தினத்தந்தி 10 Nov 2018 10:32 AM IST (Updated: 10 Nov 2018 10:32 AM IST)
t-max-icont-min-icon

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிக்கும் படத்தின், உச்சக்கட்ட காட்சியை 20 நாட்கள் படமாக்கினார்கள்சுந்தர் சி.யின் புதிய படத்தில், ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கிறார்.

‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் யு டியூப்பில் கலக்கியவர், ஆதி. இவர், ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகராகவும், டைரக்டராகவும் அறிமுகமானார். பரபரப்பாக பேசப்பட்ட இந்த படத்தை டைரக்டர் சுந்தர் சி. தயாரித்து இருந்தார். இவர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர் சி.யே தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகம் ஆகிறார். கரு.பழனியப்பன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். பாண்டியராஜன், ஹரிஷ் உத்தமன், கவுசல்யா ஆகியோரும் இருக்கிறார்கள். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

டைரக்டு செய்யும் பொறுப்பை டி.பார்த்திபன் தேசிங்கு ஏற்றுள்ளார். ‘மான் கராத்தே,’ ‘ரெமோ’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர், இவர், இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம்எழுதி டைரக்டராக அறிமுகம் ஆகிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“இது, ஆக்கி விளையாட்டு தொடர்பான படம். அதனால் நிறைய ஊர்களுக்கு சென்று படமாக்கி இருக்கிறோம். இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. வெறும் விளையாட்டுடன் நின்று விடாமல், காதல், நட்பு, குடும்பம் என அனைத்து அம்சங்களும் படத்தில் இடம் பெறுகின்றன. 6 வயது முதல் 60 வயது வரை அனைவரையும் திருப்திப்படுத்தும் படமாகவும் இருக்கும், காரைக்கால், தரங்கம்பாடி, புதுச்சேரி மற்றும் சென்னையில் படம் வளர்ந்து இருக்கிறது.”
1 More update

Next Story