ஹீரோ


ஹீரோ
x
தினத்தந்தி 25 May 2019 11:07 PM IST (Updated: 25 May 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

2 புதிய படங்களில் சிவகார்த்திகேயன் சினிமா முன்னோட்டம்.

சிவகார்த்திகேயன் நடித்த `மிஸ்டர் லோக்கல்' படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர், `ஹீரோ' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில், அவருக்கு ஜோடியாக டைரக்டர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். பி.எஸ்.மித்ரன் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் டைரக்‌ஷனில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதில், சிவகார்த்திகேயன் ஜோடிகளாக அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பாண்டிராஜ் டைரக்டு செய்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

பிரமாண்டமான முறையில் தயாராகும் இந்த படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
1 More update

Next Story