கண்டதை படிக்காதே


கண்டதை படிக்காதே
x
தினத்தந்தி 25 May 2019 11:16 PM IST (Updated: 25 May 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

`சஸ்பென்ஸ்' நிறைந்த `கண்டதை படிக்காதே' படத்தின் முன்னோட்டம்.

ராதாமோகன், சிம்புதேவன், வேலு பிரபாகரன் ஆகிய பிரபல டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த ஜோதிமுருகன், `கபடம்' என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானார். அடுத்து இவர், `கண்டதை படிக்காதே' என்ற படத்தை டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் சொல்கிறார்:-

``இது, சஸ்பென்ஸ்' நிறைந்த பரபரப்பான படமாக இருக்கும். படம் ஆரம்பித்த மூன்றே நிமிடங்களில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து விடும். படத்தின் இறுதி காட்சி வரை, `சஸ்பென்ஸ்' இருந்து கொண்டேயிருக்கும்.

ஒவ்வொரு காட்சியிலும் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை தூண்டுகின்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆதித்யா கதாநாயகனாக நடிக்கிறார். சண்டை காட்சிகளில் ஆதித்யா, பான்பராக் ரவி, மற்றும் ஆர்யன் நடித்துள்ளனர். சபிதா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். சத்யராம் தயாரித்து இருக்கிறார்.''

படம் சென்னை, கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களில் வளர்ந்து இருக்கிறது.''
1 More update

Next Story