டகால்டி


டகால்டி
x
தினத்தந்தி 6 Jun 2019 10:41 PM IST (Updated: 6 Jun 2019 10:41 PM IST)
t-max-icont-min-icon

வங்காள நடிகை ஜோடியாக நடிக்க சந்தானம் நடிக்கும் புதிய படம், ‘டகால்டி’ படத்தின் முன்னோட்டம்.

நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த ஒரு புதிய படத்துக்கு, ‘டகால்டி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது, நகைச்சுவை காட்சிகளில் கவுண்டமணியும், சந்தானமும் அடிக்கடி பயன்படுத்துகிற வார்த்தை. அதையே சந்தானம் தனது படத்துக்கு பெயராக வைத்து இருக்கிறார். டைரக்டர் ஷங்கரிடம் பல படங்களில் ‘அசோசியேட் இயக்குனர்’ ஆக பணிபுரிந்த விஜய் ஆனந்த், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். அவர் கூறியதாவது:-

“இது அதிரடி சண்டை காட்சிகளும், நகைச் சுவையும் கலந்த படம். 3 டி தொழில்நுட்பத்தில் படம் தயாராகிறது. இதில், சந்தானம் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரபல வங்காள நடிகை ரித்திகாசென் நடித்து இருக்கிறார். சந்தானத்துடன் முதல்முறையாக யோகிபாபு இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, ரேகா, இந்தி நடிகர் ஹேமந்த்பாண்டே, சந்தானபாரதி, மனோபாலா, நமோநாராயணா, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஆகியோரும் நடித்துள்ளனர்.

பின்னணி பாடகர் விஜய் நாராயணன், இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். திருப்பூரை சேர்ந்த பிரபல டாக்டரும், திரைப்பட வினியோகஸ்தருமான எஸ்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். இணை தயாரிப்பு: விஜய்நாராயணன். சென்னை, காரைக்குடி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர், கடப்பா, புனே, மும்பை போன்ற இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.”
1 More update

Next Story