தடகள விளையாட்டு வீரராக ஆதி


தடகள விளையாட்டு வீரராக ஆதி
x
தினத்தந்தி 18 Jun 2019 11:16 PM IST (Updated: 18 Jun 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

கனவுகளை நிறைவேற்ற போராடும் தடகள விளையாட்டு வீரராக ஆதி! படத்தின் முன்னோட்டம்.

ஈரம், மிருகம், அரவான், அய்யனார் உள்பட பல படங்களில் நடித்த ஆதி, கதாபாத்திரமாக மாறும் கதாநாயகர்களில் ஒருவர். அவர் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரங் களுக்கு உயிர் கொடுக்கும் வகையில், மகத்தான நடிப்பு திறமையை வெளிப்படுத்துபவர். இவர் அடுத்து, விளையாட்டு அடிப்படையிலான ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அறிமுக டைரக்டர் பிரித்வி ஆதித்யா இயக்கும் அந்த படத்தில் ஆதி, தடகள விளையாட்டு வீரராக நடிக்கிறார்.

பெயர் சூட்டப்படாத இந்த படத்தை பற்றி டைரக்டர் பிரித்வி ஆதித்யா கூறுகிறார்:-

“தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்த படம் அதில் இருந்து விதி விலக்கானது. தடகள விளையாட்டு உலகில் நடக்கும் கதை, இது. தனது கனவுகளை நிறைவேற்ற கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி படம் பேசும்.

தடகள வீரருக்கு தேவையான கட்டுமஸ்தான உடற்கட்டை கொண்டவர், ஆதி. அதனால்தான் கதாநாயகனாக அவரை தேர்வு செய்தோம். கதாநாயகியாக நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஐ.பி.கார்த்திகேயன், ஜி.மனோஜ், ஜி.ஸ்ரீஹர்ஷா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது.”
1 More update

Next Story